ஆளுநரை சந்திக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்: காவிரி குறித்து கருத்து கேட்க வாய்ப்பு?

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோரை சந்தித்து பேச ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரம் குறித்து கேட்டறிய தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோரை சந்தித்து பேச ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு மீறியுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Governor calls TN Chief Secretary and Advocate General

இதனிடையே காவிரிக்காக மக்களும் போராட்டங்களில் குதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோரை இன்று பிற்பகல் சந்தித்து பேச ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பற்றியும் காவிரிக்காக நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் அவர் கேட்டறிய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+