ஆளுநர் தலையீடு நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது.. சொல்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  துடைப்பத்தை கையில் எடுத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால்- வீடியோ

  சென்னை: அரசில் ஆளுநர் தலையீடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

  கோவையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை போல் துடைப்பம் பிடித்து தூய்மை செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.

  Narayanasamy

  இரண்டாவது நாளாக இன்றும் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளதாக அவர் கூறினார்.

  மாநில அரசை கட்டுப்படுத்த ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் முதல்வர் நாராயணசசாமி குற்றம்சாட்டினார். ஆளுநர் ஆய்வு செய்வது தவறல்ல, ஆனால் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுதான் தவறு என்றும் அவர் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Puducherry Chief Minister Narayanasamy said that Governor's intervention disease has spread to Tamil Nadu. He accused that The central government uses governors to control the state government.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற