Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விறுவிறுப்பாகிறது சுவாதி வழக்கு.. அரசு வக்கீல் திடீர் மாற்றம்.. சிறப்பு வக்கீல் நியமனம் #swathy

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதி படுகொலை வழக்கு தீவிரமடைகிறது. இந்த வழக்கை வாதாடும் சிறப்பு அரசு வழக்கறிஞராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ம் தேதி காலை கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் சுவாதி. அவரைக் கொலை செய்ததாக ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கைதில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை என்று ஒரு தரப்பு தீவிரமாக வாதிட்டு வருகிறது.

Govt appoints Special PP in Swathy murder case

தற்போது ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் அரசுத் தரப்பு திரட்டி வந்தது. இந்த வழக்கில் இதுவரை அரசு சார்பில் கொளஞ்சிநாதன் என்பவர் ஆஜராகி வந்தார். தற்போது அவரை அரசு மாற்றி விட்டது.

அதற்குப் பதில் சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இனிமேல் ராம்குமார் வழக்கில் ஆஜராவார். இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க அரசுத் தரப்பு உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளது. இதன் காரணமாகவே அனுபவம் வாய்ந்த சிறப்பு வழக்கறிஞரை அது நியமித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+