For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரூர் ஏரியில் பொதுப்பணித்துறையினர் மண் கொட்டத்தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: போரூர் ஏரியில் பொதுப்பணித்துறையினர் மண் கொட்டத் தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, போரூர் பூந்தமல்லி சாலையில் அய்யப்பன் தாங்கலுக்கும் போரூர் சந்திப்புக்கும் இடையே உள்ள சாலையின் இடது புறம் போரூர் ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தற்போது 330 ஏக்கருக்கு சுருங்கி விட்டது. எனவே, பல்வேறு கட்சியினர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Green tribunal stays PWD action in chennai Porur lake

இந்நிலையில், போரூர் ஏரியில் சாலை அமைப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் மண் கொட்டப்பட்டு வருகிறது. இதனால்

இதற்கிடையே போரூர் ஏரியில் ஏரியின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்று இடதுபுறம் தெற்கு திசை வரை ரோடு போட பொதுப் பணித்துறை சார்பில் மண் கொட்டப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் மேகநாதன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, "மண் கொட்டப்படுவதால் ஏரி மாசு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் மனுதாரர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. எனவே மணல் கொட்டுவதை பொதுப் பணித்துறை உடனடியாக நிறுத்த வேண்டும். இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் தீர்ப்பாயத்தில் உடனடியாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை வரும் 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

English summary
The Green tribunal has ordered the Tamilnadu government's public work department to stop filling up sand in Porur lake for private purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X