For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி அமல்.. அதிக பணம் வசூலிக்க கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு தடை!

ஜிஎஸ்டியை காரணம் காட்டி கூடுதல் தொகை வசூலிக்ககூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜிஎஸ்டியை வரி அமல்படுத்தப்படுவதை காரணம் கட்டி அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்புகளை பதிவு செய்துள்ளவர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலிக்ககூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜூலை 1, 2017-க்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக பதிவு செய்து மற்றும் அதற்காக ஒரு பகுதி பணம் செலுத்திய நுகர்வோர்களை ஜூலை 1, 2017-க்கு முன்பு முழுத் தொகையினையும் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக மாநிலங்களுக்கும், கலால் மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியத்திற்கும் பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.

GST: Pass on tax benefits to buyers, government tells builders # oneindiaonetax

மேற்காணும் நடவடிக்கைகள் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்துக்கு எதிரானது. மத்திய வருவாய் துறையானது குடியிருப்புகள், வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கான கட்டுமான செலவு சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப் பின் கணிசமாக குறையும் என்றும் அவ்வரியானது தற்போதுள்ள மத்திய மற்றும் மாநிலங்களால் விதிக்கப்படும் பல்வேறு மறைமுக வரிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள வரிநடைமுறைகளில் சேவை வரிக்கான உள்ளீட்டு வரி வைப்பீடு செலுத்துவதற்கான வழிவகையில்லை. தற்போதுள்ள வரி நடைமுறைகளில் மத்திய கலால் வரி, மதிப்பு கூட்டு வரி, நுழைவுவரி முதலியன கட்டுமானப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வரிகள் மேம்பாட்டாளர்களால் செலுத்தப்பட்டு, நுகர்வோர் குடியிருப்புக்காக செலுத்தும் இறுதி விலையில் அச்செலவினங்கள் ஏற்றப்படுகிறது.

நுகர்வோர்களுக்கும் தாம் குடியிருப்புக்காக செலுத்தும் இறுதி விலையில் அச்செலவினங்கள் சேர்க்கப்படுவது வெளிப்படையாக புலப்படாது. மேலும், நுகர்வோருக்கு குடியிருப்பிற்கான விலையில் ஏற்றப்படும் மறைமுக வரிகள் மற்றும் உள்ளீட்டு வரிகள் முதலியன தெரிவதில்லை. மத்திய வருவாய் துறை மேற்கண்ட சூழல், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப்பின் மாற்றத்தினை காணும் என்று தெரிவித்துள்ளது. முழுமையான உள்ளீட்டு வரி வைப்பீடு வசதியின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியினால் விதிக்கப்படும் 12 சதவீத வரியானது ஈடு செய்யப்படும். இதன் மூலம் உள்ளீட்டு பொருட்களுக்கான வரி குடியிருப்புகளுக்கான இறுதி விலையில் இணைக்கப்படாது.

உள்ளீட்டு வரி வைப்பீடு வசதியின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியினால் விதிக்கப்படும் 12 சதவீத வரியானது ஈடு செய்யப்படும். இந்த காரணத்தினால் மேம்பாட்டாளருக்கு உள்ளீட்டு வரி வைப்பீடு தொகை திரும்ப செலுத்தும் வசதி தடைசெய்யப்பட்டுள்ளது.

மேம்பாட்டாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரியினால் ஏற்படும் குறைந்த வரிச்சுமை பயனால் குறைந்த விலை மற்றும் தவணையில் குடியிருப்புகளை நுகர்வோர் பெற வழி ஏற்படும். இந்திய கட்டுமானோர் சங்கம் மற்றும் கட்டிட, மனை மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியோரை வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த ஒரு மேம்பாட்டாளர் / கட்டுமான நிறுவனமும் சரக்கு மற்றும் சேவை வரியினை அமல்படுத்துவதால் அவர்கள் செலுத்தும் தவணைகளுக்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்று கூறி பணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
As the country enters a new tax regime under the Goods and Services Tax from July 1, the State Housing and Urban Development Department has asked developers and builders to pass on benefits of the lower tax burden to buyers by reducing prices or tax rate on installments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X