எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சென்னை போலீஸில் மாணவர்கள் புகார்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை : பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தொடர்பாக எச்.ராஜாவைக் கைது செய்யக் கோரி சென்னை கமிஷனரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், பெரியார் சிலை முன்பு விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தனது பதிவை எச்.ராஜா நீக்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் எச்.ராஜாவை எதிர்த்துப் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்தப்போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், எச்.ராஜா மீது மாணவர் அமைப்பினர் சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதில் மனநலம் பாதிக்கப்பட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரியாரையும் தமிழக மக்களையும் அவமதித்ததற்காகப் பெரியார் சிலை முன்பு விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications