குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்களும் உண்டு...குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களும் உண்டு.... எச். ராஜா

குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்களும் உண்டு...குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களும் உண்டு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா கூறுகையில் குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்களும் உண்டு...குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களும் உண்டு என்றார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் தீர்ப்பை கடந்த 7 ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்தது.

H.Raja says that justice will triumphs

இந்நிலையில் சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டதாக கூறி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் சிபிஐ நீதிபதி விடுவித்தார். இதனால் திமுக குதூகலமாகியுள்ளது.

இந்த தீர்ப்பை பாஜகவினர் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் தீர்ப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், குன்ஹா தீர்ப்பை கொண்டாடிய வர்கள் உண்டு.

குமாரசாமி தீர்ப்பால் குதூகலமான வர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்சநீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் CBI, ED மேல்முறையீடு செய்ய வேண்டும்.உச்சநீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+