ராணிப்பேட்டை டூ ஆற்காடு.. பாலாறு பாலம் கிட்ட மட்டும் போயிடாதீங்க.. ஏன் தெரியுமா? சபாஷ் அறிவிப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு இடையேயான பாலாறு புதிய மேம்பாலம் பராமரிப்பு பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை - ஆற்காடு இடையே உள்ளது, 65 ஆண்டுகள் பழமையானது பாலாறு மேம்பாலம்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கி கொண்டிருக்கிறது இந்த பாலாறு.

கிருஷ்ணகிரி: சென்னையிலிருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே ராணிப்பேட்டை - ஆற்காடு நகரங்களை இணைக்க கடந்த 1859-ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
அந்தவகையில் 65 ஆண்டுகளாகவே, சென்னை - கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு செல்லும் வாகனங்களையும், பாலாற்றின் இரு பக்கங்களின் கரைகளில் வாழும் மக்களையும் ஒன்றிணைக்கும் முக்கிய பாலமாக இது திகழ்ந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்: இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை தங்க நாற்கர சாலை திட்டத்தில் இணைக்கப்பட்டு 4 வழிச்சாலையாகவும், இப்போது 6 வழிப்பாதையாகவும் மாற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.. பாலாற்றின் குறுக்கே பழைய பாலம் அருகே மேலும் 2 புதிய பாலங்களும் சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டன..
ஆனாலும், வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட பாலாற்றின் வடக்கு பக்க கரைகளிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்துமே, இந்த பழைய பாலத்தின் வழியாகவே செல்கின்றன. எனவே, 65 ஆண்டுகள் பழமையாகிவிட்ட ராணிப்பேட்டை - ஆற்காடு பாலாறு பாலத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
புதிய பாலம்: இந்நிலையில், ஆற்காடு, ராணிப்பேட்டை இடையிலான பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணிகள் தற்போது துவங்க போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. எனவே, வரும் 19.07.24 வெள்ளிக்கிழமை முதல் ஒரு மாதக்காலம் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றும் என்றும், வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், வேலூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும், விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தில்லை திருமண மண்டபம் இடதுபுறமாக வளைந்து தெங்கால் வழியாக வாலாஜா டோல்கேட் இணைப்பு சாலையில் செல்ல வேண்டும்.
வேலூர்: அதேபோல, வேலூரிலிருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பஸ்கள், விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள A2B ஓட்டல் எதிரே உள்ள இணைப்பு சாலையில் சென்று ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து செல்ல வேண்டும்... சென்னையிலிருந்து வாலாஜா வழியாக வேலூர் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் தெங்கால் வழியாகவே சென்று தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் முடிந்துவிட்டால், போக்குவரத்து இனிமேல் எளிதாகும் என்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications