நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேதியை மாற்றகோரி விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தது. வரும் 15ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முறைகேடாக நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்க்கை போலியாக நடத்தப்பட்டு தேர்தல் நடக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த தேர்தலை ஞாயிறுக்கிழமை நடத்தும் வகையில் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதேதேபோல் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி பூச்சி முருகன் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். சரத்குமார் தரப்பினர் 2 வாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான வேட்புமனுதாக்கல் இன்று நடைபெற இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications