Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் தமிழ்நாடு.. வீடு வீடா போய் கதவை தட்டி.. "வீட்ல குழந்தை இருக்காம்மா".. நெகிழும் தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மழை வெள்ள பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது தூத்துக்குடி.. இங்கு நிவாரண பணிகளும் வேகம் எடுத்து வருகின்றன.

தூத்துக்குடியை உலுக்கிஎடுத்துவிட்டது கனமழை.. இதனால், அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன..

Heart Touching incident in Thoothukudi and Amazing help from volunteers, Tamil Nadu People to flood affected people

சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை என்பதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும், மீட்பு பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்கள்.

உணவுப்பொருட்கள்:
5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், இங்கு சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அரசு பஸ்கள்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை, கட்டணமின்றி அரசு பஸ்களில் அனுப்பலாம் என்று தமிழக அரசும் அறிவித்திருக்கிறது.. இப்படி அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் 4 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார் என மொத்த இயந்திரமும் நிவாரண பணிகளில் மும்முரமாகி உள்ளனர். இதற்கு நடுவில் தன்னார்வலர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.. சாப்பாடு, தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பால், பிரட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

முகாம்கள்: முகாம்கள் தவிர, கோவில்களில், மசூதிகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கான உதவிகளை தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரல், கேம்பலாபாத், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... கோவில்களில் உள்ள ஜெனரேட்டர் வசதிகளை பயன்படுத்தி, தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போட்டுக் கொள்கிறார்கள்..

தூத்துக்குடி: இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, உணவு தயாரித்து வழங்கி வருகிறார்கள்.. இதற்காகவே, தங்களது செல்போனில் வாட்ஸ்-அப்பில் க்ரூப் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்கள்.. வசதி படைத்த வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக இந்த க்ரூபிப்பில் இணைந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு சமைப்பதற்காக, காய்கறிகளை வாங்க சாலையில் செல்ல முடியாததால், பல கிலோ மீட்டருக்கு வாகனங்களில் சுற்றி நெல்லை வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.. இதனை ஒரு இடத்தில் வைத்து சமைத்து, அதற்கு பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பொட்டலங்களை பிரித்து அனுப்புகிறார்கள்.

திருமண மண்டபம்: முகாம்கள், திருமண மண்டபங்கள், மசூதிகள், கோயில்களில் தங்கியிருப்பவர்களை தவிர, சாலைகள் துண்டிப்பால் கிராமங்களில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கும், உணவு பொட்டலங்களை கொண்டுபோய் வழங்கி வருகிறார்கள் தன்னார்வலர்கள்.. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினமும் சாப்பாடு தந்து வருகிறார்கள்.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம், உத்தமாள்காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களால் வெளியே வரமுடியவில்லை. அங்குள்ள சாலைகளில் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நிற்பதால் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இந்த தண்ணீரில் நீந்திச்சென்று, வீடு வீடாக கதவை தட்டி, சாப்பாடு தந்து வருகிறார்கள் தன்னார்வலர்கள். கைக்குழந்தை இருக்கும் வீடுகள் இருக்கிறதா? என்று விசாரித்து பால் பாக்கெட்டுகளையும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் தந்து வருகிறார்கள்... அதேபோல, மாநிலம் முழுவதுமிருந்து, ஏராளமானோர் உணவுப்பொருட்களை அனுப்பி வருகிறார்கள்..

மனிதநேயம்:
சாதி, மத வேறுபாடுகளை களைந்து, "மனிதநேயத்தை" மட்டுமே முன்வைத்து, கோவில்களிலும், மசூதிகளிலும் தங்கியுள்ளவர்களுக்கு ஓடோடி உதவி கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+