இப்பவே கண்ணைக் கட்டுதே... வெயிலின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருமாம்!
சென்னை: இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னை, திருத்தணி, வேலூர், கடலூர், கரூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரியில் அதிகளவு வெயில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்த போதும், வெப்பத்தின் அளவு குறையவில்லை. நேற்று வேலூரில் 2 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் கடல் காற்று தாமதமாக வருவதுதான். இதனால் வெப்பம் அதிகம் உணரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இன்னும் அதிகமாக வெப்பம் நிலவுகிறது. வெப்ப சலம் காரணமாக மழை பெய்தாலும் அதற்கு மறுநாள் மீண்டும் வெயில் உச்சத்துக்கு சென்று விடுகிறது. தென் மேற்கு பருவக்காற்று வீச தொடங்கினால்தான் இனி வெப்பம் குறையும்' என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications