பிரியாணி, வறுத்த மீனுடன் ஸ்டாலின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!
சென்னையில் திமுக தலைவர் மற்றும் செயல்தலைவரை நேரில் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வறுத்த மீனுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
Recommended Video

சென்னை: கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரியாணி, வறுத்த மீனுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.
முதற்கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துவதற்காக சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவரை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

குடும்பத்தினர் அறிமுகம்
அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் சந்திரசேகர ராவ். இதைத்தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தனது குடும்ப உறுப்பினர்களை ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

வறுத்த மீனுடன்
இதனை அடுத்து, சந்திரசேகர் ராவுக்கு பிரியாணி, வறுத்த மீனுடன் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. ஸ்டாலினுடன் சேர்ந்து சந்திரசேகர ராவ் மதிய உணவு சாப்பிட்டார்.

சந்திசேகர ராவ் ஆலோசனை
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டாலினுடன், சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications