சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு.. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மென்பொறியாளர் தஷ்வந்தால் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று எரிக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர் தனது தாயை கொலை செய்த அவர் மும்பைக்கு தப்பியோடினார்.
அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இதனை முன்னிட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற வளாகத்தில் மகளிர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications