சென்னையில் ஒரு கனமழைக்காலம்... வெள்ளத்தில் நீந்தும் வாகன ஓட்டிகள்
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் அநேக இடங்களில் மழை பெய்யவில்லை. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தினசரியும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. பகல்நேரங்களில் வெயில் வாட்டினாலும் மாலை நேரங்களில் மழையும் கொட்டித் தீர்க்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

கன மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், இன்றும் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை ஆய்வுமையம் கணித்தது போலவே சென்னையில் இன்று மாலையில் மழை கொட்டித்தீர்த்தது.
கொட்டிய கனமழை
மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் திடீரென பெருமழை பெய்தது. மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம்,ராயப்பேட்டை கோயம்பேடு, வடபழனி, திருமங்கலம், எழும்பூர், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பெருகிய வெள்ளம்
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிகளை விட்டு வீடு திரும்பிய மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

போக்குவரத்து பாதிப்பு
சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடாது கொட்டித்தீர்க்கும் மழையால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.
கனமழையால் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. அண்ணா பல்கலைக் கழக வளாகமே மழையால் ரம்மியமாக காட்சி தருகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications