காற்றழுத்த தாழ்வு நிலை.. சென்னை உட்பட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு #ChennaiRains
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு வங்க கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. நேற்று இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் 43.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்து டன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை அருகே பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் சென்னை புறநகர்களான பல்வாரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட பல பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பல இடங்களில் இன்னும் விட்டு விட்டு பெய்கிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications