For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பேய் மழை... புயல் காற்றுக்கு ஆடுவது போல் "நடனமாடிய" மரங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மரங்களும் புயல் காற்றுக்கு ஆடுவது போல் ஆடுகின்றன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாகவே வெப்பசலனம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

கடந்த இரு தினங்களாக மழை பெய்வது போல் மேகங்கள் கூடிவிட்டு பின்னர் கலைந்து செல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தன.

பயங்கர

பயங்கர

இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பயங்கர காற்று வீசியது.

புறநகர் பகுதிகளில்

புறநகர் பகுதிகளில்

பின்னர் அண்ணாநகர், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில் மழை பெய்வதற்காக இருட்டி கொண்டு வருகிறது.

தெறிக்க விடும் மழை

தெறிக்க விடும் மழை

இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் அண்ணா நகர் மேற்கில் மழை சும்மா தெறிக்க விடுகிறது. மிகவும் கனமழை பெய்து வருகிறது.

ஒதுங்காதீர்

மினி வர்தா புயல் போல் மழை நிற்காமல் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் பெய்தது. மரங்கள் விழுந்தன. எனவே மழைக்காக மரங்களின் கீழ் ஒதுங்காதீர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளிலும்

நகரின் பல பகுதிகளிலும் புயல் காற்று போல காற்று வீசியதால் மக்கள் பீதியடைந்தனர். புறநகர்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் இடியுடன் மழை பெய்தது. இந்த திடீர் பேய்க்காற்று, மழையால் சென்னை மக்கள் பீதியில் மூழ்கினர்.

English summary
Heavy rain hits in Chennai and most of the mofussil areas. Tamilnadu Weatherman Pradeep John says that In AnnaNagar West Massive ground strikes, High intensity rains and mini vardah going on here non-stop for last 30 mins. Many trees have fallen here. Dont stand near the trees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X