வடகிழக்கு பருவமழை தீவிரம்... சென்னையில் விடிய விடிய மழை - நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் கன மழை நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டி தீர்த்து தீர்த்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ; தாம்பரத்தில் 3 செ.மீ பழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருமழை கடந்த 30-ந் தேதி முதல் தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது. கடந்த 15 நாள்களாக ஒரு சில நாள்களை தவிர கனமழை கொட்டியது.

Heavy rain lashes in Chennai

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று மாலை முதல் இரவு வரையும், அதன் பின்னர் சற்று ஓய்ந்து விடியற்காலை வரையும் மழை கொட்டித் தீர்த்தது.

அடுத்த 24 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழையும், தாம்பரத்தில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain hits in Chennai. Water logged in low level places. People's normal life goes out of gear.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற