மறுபடியும் கன மழை.. மீண்டும் வெள்ளக்காடான தமிழகம்..!
சென்னை: தமிழகம் மீண்டும் வெள்ளக்காடாகி வருகிறது. மறுபடியும் பெய்து வரும் கன மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கடலூரிலும் வெள்ளக்காடாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் விடாமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.

அதேபோல கடலூரிலும் வெள்ளப் பெருக்காகியுள்ளது. அங்கு, கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் பாதுகாப்பு நலன் கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோமுகி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் எச்சரித்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளது.
சென்னையில் விட்டு விட்டு மழை
சென்னையிலும், புறநகர்களிலும் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்களில் கன மழை பெய்தது. பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மீண்டும் வெள்ளக்காடாகின.
இரவில் பலத்த மழையை சென்னை புறநகர்ப் பகுதிகள் கண்டன. இரவெல்லாம் பெய்த மழையால் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை நகரிலும் முக்கியச் சாலைகளில் நீர் தேங்கி மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரியில் தம்பதி பலி
சென்னை வேளச்சேரியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி உயிரிழந்தனர். அஷ்டலட்சமி நகரில் கடைக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலியாகினர். தம்பதியின் இருகுழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செங்குன்றம் ஏரி (புழல் ஏரி) நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து ஏரியில் இருந்து 70 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் தொடர்ந்து கன மழை பெய்து கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தூத்துக்குடி தாலுகாவுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications