மதுரையை குளிர்வித்த கோடை மழை.. மக்கள் மகிழ்ச்சி !
மதுரை: மதுரையில் சனிக்கிழமை மாலை திடீரென அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் சில பகுதிகளில் பணப்பட்டுவாடா ஜரூராக நடந்து வருவதால் வாக்காளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெப்பச் சூழல் மறைந்து குளிர்ந்த நிலையை மக்கள் அனுபவித்தனர். அவ்வப்போது காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை இருந்தது. கடந்த இரு நாள்களாக கடும் வெப்பம் நிலவியதுபோது அவ்வப்போது மழை பெய்ததால் நகரில் குளுமையான சூழல் நிலவியது.

சனிக்கிழமை பகலில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுவீசிய நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே காளவாசல், டிவிஎஸ், பென்னார், முடக்குச்சாலை, நாகமலை புதுக்கோட்டை, விராட்டிபத்து, அச்சம்பத்து, பில்லர் சாலை, பைபாஸ் உள்ளிட்ட இடங்கள் இருளில் மூழ்கிய சம்பவமும் நிகழ்ந்தது. அப்போது சில இடங்களில் பணப்பட்டுவாடவும் ஜோராக நடந்ததாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடை மழை கொட்டுகிறதோ இல்லையோ பண மழை ஒரு பக்கம் கொட்டோ கொட்டோன்னு கொட்டுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications