திடீர் மழையால் குளிர்ந்தது சென்னை.. புதுவையிலும் பரவலாக மழை !

மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவிலும் மழை பெய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடும் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த சென்னையில் இன்று பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவிலும் மழை பெய்து வருகிறது. புதுவையிலும் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை கொட்டியது.

சென்னையில் இன்று பகலில் வெப்பம் தகித்த நிலையில் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திடீரென திருவல்லிக்கேணி, பாரிமுனை பகுதியில் மழை கொட்டியது.

heavy rain many places in chennai

மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்நிலையில் மாலையில் சென்னை மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்தது.

கிண்டி, ஆதம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. வண்டலூர், பெருங்களத்தூர், பல்லாவரம், பலவந்தாங்கல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. பல நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெய்த மழையால் சற்றே வெப்பம் தணிந்துள்ளது.

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்கிறது. வேலுாரில் பெய்த மழையினால் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பகலில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டாலும் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+