காற்றழுத்த தாழ்வு நிலை...தூத்துக்குடியில் நள்ளிரவில் கனமழை
தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது.
வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது.

இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை ஓயும். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். கிழக்கிலிருந்து வரும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இங்கு மழைக்கு வாய்ப்புள்ளது. இவை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. கன மழைக்கும் வாய்ப்பில்லை.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துகுடியில் நள்ளிரவில் கனமழை பெய்தது. முத்தையாபுரம், புதுக்கோட்டை, திரேஸ்புரம், பிரையண்ட் நகர், சிதம்பர நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. தற்போது அந்த பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications