தமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’- ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு!
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நாளை அதிதீவிர மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்திய வானிலை மையம். வானிலை மையம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கைப்படி ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை குறிப்பில், தமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களில் மிகமிக பலத்த மழை பெய்யும் என்கிறது அந்த எச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரபிக் கடலில் தாழ்வு நிலை
முன்னதாக சென்னையில் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. மேலும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு மழை
இதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

4 மாவட்டங்களில் அதிக மழை
கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கு வார்னிங்
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் 12 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இதனிடையே கேரளாவின் கொல்லம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications