தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்த மழை கொட்டும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தூத்துக்குடி, தேனி திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தற்போது தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 8 சென்டி மீட்டர் மழையும், நாகர்கோவிலில் 6 சென்டி மீட்டர் மழையும் கோவை மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications