விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னையில் குவியும் மக்கள்.. இந்த பக்கம் போகாதீங்க! டிராபிக் ஜாம்
செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்புவதால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது. இன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலைகளில் அக்கரை பகுதி வழியாக பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் நேற்று புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்கு குவிந்ததாலும் காமராஜர் சாலையில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications