மஸ்கட் சென்ற மகனை காணவில்லை: மீட்டுத் தரக் கோரி தாய் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: மஸ்கட்டிகற்கு வேலைக்கு சென்ற மகன் குறித்த தகவல் எதுவும் இல்லாததால் அவரை மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர் மல்க மனுக்கள் அளித்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சி வடபாதி கள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீராச்சாமி, சந்திரா தம்பதி. கடந்த 26ம் தேதி மதுக்கூர் தமுமுக அலுவலகத்திற்கு சென்ற சந்திரா தனது மகன் மஸ்கட் சென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த தகவலும் இல்லை. இதன் காரணமாக எனது கணவர் மனநிலைப்பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து கடந்த 27ம் தேதி சந்திரா அவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகனை மீட்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு சந்திரா சார்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மனுவில் சந்திரா கூறியிருப்பதாவது,

எனது மகன் முத்துக்குமார் கடந்த 2002 ஆம் ஆண்டு மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். பின்னர் இரண்டு முறை தபாலில் தொடர்பு கொண்டார். எனது மகனின் கடிதம் கடைசியாக கடந்த 07/05/2002 அன்று வந்தது. அதன் பின்னர் இன்றுவரை எனது மகனை பற்றி எந்தவித தகவலும் இல்லை. எனது மகனை இந்திய தூதரகம் மூலமாக மீட்டுத்தாருங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மனுக்களை கொடுத்துவிட்டு சந்திரா வெளியில் வந்தபோது அவர் கூறுகையில்,

நான் எல்லோரிடமும் எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கச் சொல்லினேன். யாரும் காது கொடுத்து கேட்கவில்லை இந்த முஸ்லிம் பாய்கள் இன்று கலெக்டர் ஐயாவிடம் மனு கொடுக்க செய்து இருக்கின்றார்கள் என்று அழுது கொண்டே கூறினார்.

அவருடன் மதுக்கூர் நகர தமுமுக தலைவர் ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் கேடிஎம் நிஷார் அகமது, நஸாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அன்பான மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களே! முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் சந்திரா என்ற தாயின் மகனை மீட்க.

பெயர் : முத்துக்குமரன்/ வீராசாமி(MUTHU KUMARAN/VEERASAMY)

பாஸ்போர்ட் எண் : ஏ3949059

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+