மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை: கடந்த திங்களைத் தொடர்ந்து இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பை போலீசார் மேலும் அதிகப்படுத்தியுள்ளனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு டெலிபோன் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

உடனடியாக விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், மேற்கொண்டு நடத்திய விசாரணையில் மிரட்டல் போன் நாகப்பட்டினத்தில் இருந்து வந்தது ண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் தலைமையில் தனிப்படை போலீசார் 2 நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு மிரட்டல் விடுத்தது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மூலம் விமான நிலையம் தகர்க்கப் படும் என டெலிபோன் மூலமாக மர்ம ஆசாமி ஒருவன் மிரட்டல் விடுத்துள்ளான்.
இந்த மர்ம போனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றன.
விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி முதல் உள்பகுதி வரை 20 இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் நடமாடுகிறார்களா என மத்திய பாதுகாப்புப் படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு தினங்களில் சென்னை விமான நிலையத்துக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிரட்டல் விடுக்கும் மர்ம நபரை பிடிக்கும் முயற்சிகளை தீவிரமான மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications