அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி அவசியம்: உயர் நீதிமன்றம்
சென்னை: ஊழல் புகாருக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் என்ற அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாக தமிழக லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அனுமதி பெறவேண்டும் என்று கடந்த 1988-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு ஊழியர்கள், பதவி வேறுபாடு இல்லாமல், யார் மீது ஊழல் புகார் வந்தாலும், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று பிப்ரவரி 2-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மற்றொரு மனுவில், பிப்ரவரி 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சட்டவிரோதமானது என்றும், இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 13-க்கு ஒத்திவைத்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து












Click it and Unblock the Notifications