சுட்டெரிக்கும் வெப்பம்... தமிழகத்தின் 7 நகரங்களில் சதமடித்த கோடை வெயில்: சேலத்தில் 103 டிகிரி !
சென்னை: கோடை வெயில் துவங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் 7 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவானது. இதில் சேலத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதத்திலேயே தொடங்கியுள்ள வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிற்பகல் முதலே அனல் காற்றின் தாக்கமும், புழுக்கமும் காணப்படுகிறது. கடந்த இரு வாரமாக, பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இன்று பதிவாகியது. அடுத்து வரும் 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.
அதே நேரத்தில் வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)
சேலம் - 103
மதுரை - 100
கரூர் பரமத்தி - 100
பாளையங்கோட்டை - 100
தருமபுரி - 100
வேலூர் - 100
கோவை - 100
திருச்சி - 99
சென்னை மீனம்பாக்கம் - 93
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications