ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது.
உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.
- என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
- நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
- ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
- பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
- இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
- மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது
என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும்.
இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications