பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு... மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்- ராமதாஸ்
பத்திரப்பதிவுக் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கக் கூடும்.

அதேநேரத்தில் பதிவுக் கட்டணம் நான்கு விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதால் நேர்மையாக சொத்து மதிப்பைக் காட்ட விரும்புபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், 2012-ஆம் ஆண்டு ஏப்ரம் மாதத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்புகள் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டன. பகுதிவாரியாக நிலங்களை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பது தான் சரியான அணுகுமுறையாகும். இதைத் தான் பாமகவும் வலியுறுத்தி வந்தது.
ஆனால், அதை ஜெயலலிதா அரசு ஏற்காத நிலையில், பத்திரப் பதிவு மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்ததால், இப்போது தமிழக அரசு விழித்துக் கொண்டு, வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கிறது. ஆனால், வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதில் ஜெயலலிதா எந்த தவறை செய்தாரோ, அதே தவறை இப்போதைய எடப்பாடி அரசும் செய்திருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பும் எவ்வாறு கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டதோ, அதேபோல் இப்போது அனைத்து நிலங்களின் மதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவறாகும். நிலங்களில் தேவை, அமைவிடம், சந்தை மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு பகுதிக்குமான நில வழிகாட்டி மதிப்பை அரசு நிர்ணயித்திருக்க வேண்டும்.
2012-ஆம் ஆண்டில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தது என்பதும், இதனால் நில வணிகமும், பத்திரப்பதிவும் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பதும் உண்மை. அதே நேரத்தில் கணிசமான பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட குறைவாகவே இருந்தது. அங்கெல்லாம் வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கத் தேவையில்லை.
ஆனால், 2012-ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப் பட்டபோது அதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பகுதிவாரியாக நில மதிப்பை நிர்ணயம் செய்தால் முன்பு நடந்த முறைகேடுகள் வெட்ட வெளிச்சம் ஆகி விடும் என்பதால், அதை மறைக்கும் வகையில் இப்போது அனைத்து நிலங்களின் மதிப்பும் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பதிவுக் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பயனை பதிவுக்கட்டண உயர்வு அழித்து விடும்.
உதாரணமாக ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கு நேற்று வரை முத்திரைக்கட்டணமாக ரூ.21 ஆயிரம், பதிவுக் கட்டணமாக ரூ.3000 என ரூ.24,000 செலுத்த வேண்டும். வழிகாட்டி மதிப்பு குறைப்பால் இது ரூ.16,000 ஆக குறைந்திருக்க வேண்டும். ஆனால், பதிவுக்கட்டண உயர்வால் ரூ.22,000 ஆக குறைந்துள்ளது. இதனால் பயனில்லை.
அதுமட்டுமின்றி, சில இடங்களில் சொத்துகளின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாக உள்ளது. சந்தை மதிப்பின்படி சொத்துகளை வாங்குபவர்கள் நேர்மையான முறையில் சொத்து மதிப்பை காட்ட நினைத்தால் அவர்கள் வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது நேர்மையாக செயல்பட நினைப்பவர்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, சொத்துகளைப் பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 4 விழுக்காடு முத்திரைக் கட்டணம், ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை ஏற்று தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications