தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புராதன- வரலாற்று நாடக விழா!
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் புராதன நாடகக் கலைவிழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் சட்டப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டு, நாடகம் ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 5 நாடகங்களுக்கு ரூபாய் 7.50 லட்சம் தொகையை தாயுள்ளத்தோடு, நாடகக் கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் வழங்கி இருக்கிறார்கள்.

அவ்வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நாரத கான சபா ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணியளவில், டி.டி.கே சாலையில் உள்ள சத்குரு ஞானாநந்தா ஹாலில் புராண நாடக விழா நடக்கிறது.
இவ்விழாவின் முதல் நாடகமாக 08.03.2015 டி.பாலசுந்தரம் அவர்களின் தமிழரசன் தியேட்டர்ஸ் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து 09.03.2015 அன்று மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும் பக்தப்பிரகலாதா, 10.03.2015 அன்று கே.ஆர்.எஸ்.குமார் அவர்களின் நாடகக் காவலர் கலைக்கூடம் வழங்கும் அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர், 11.03.2015 அன்று சான் பாஷா அவர்களின் தேவி கலைக்கூடம் வழங்கும் காரைக்கால் அம்மையார், 12.03.2015 அன்று நாடகப் பணி அருணகிரி அவர்களின் கங்கை கலாலயா வழங்கும் கிள்ளிவளவன் காதல் ஆகிய புராண நாடகங்கள் மேடையேற்றம் செய்யப்பட உள்ளது.

அனைவரும் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவினை தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் திரு.தேவா, உறுப்பினர் செயலாளர் சித்ரா விஷ்வேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
-இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications