ஆஹா.. ஸ்கெட்ச் போட்டதே மகாராணிதானாமே.. பல்லாவரம் 227 பவுன் கொள்ளையில் பயங்கர திருப்பம்!
Recommended Video

சென்னை: பல்லாவரத்தில் 227 பவுன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள கார்டன் உட்ரோப் நகரில் வசித்து வருபவர் செந்தமிழ் யோகசேரன். இவர் பெருமாள் நகரில் ரெப்கோ வங்கியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் நுழைந்தனர்.
பின்னர் யோகசேரன், அவரது மனைவி, பணிப்பெண் மகாராணி உள்ளிட்டோரை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் தம்பதியை பீரோ உள்ள அறைக்கு அழைத்து சென்று அங்கு பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள், தம்பதி அணிந்திருந்த 27 பவுன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

சிசிடிவி காட்சிகள்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

ஒப்புதல்
இதையடுத்து வீட்டு பணிப்பெண் மகாராணி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மகாராணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது யோகசேரன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தான்தான் என்பதை ஒப்புக் கொண்டார்.

பணம், நகை
அவரிடம் நடத்திய விசாரணையில் யோகசேரன் வீட்டுக்கு மகாராணி இரு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அவர்களது வீட்டில் ஏராளமான பணமும் நகைகயும் இருப்பதை அறிந்து கொண்டார்.

சாப்பாட்டில் விஷம்
இவற்றை கொள்ளையடிக்க மதுரையிலிருந்து 5 பேரை அழைத்து வந்து சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இதனிடையே யோகசேரன் இரு உயர்ரக நாய்களை வளர்த்து வருவதால் கொள்ளை சம்பவம் நடக்கும்போது அந்த நாயால் பிரச்சினை உண்டாகும் என பயந்த மகாராணி இரு நாய்களுக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

செயல்பாடு
இதையடுத்து சரியான சந்தர்ப்பம் பார்த்து அந்த 5 பேரையும் யோகசேரன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போதுதான் முதலாளிக்கு தன் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக தன்னையும் கத்தி முனையில் மிரட்டுமாறு கூறியுள்ளார். மகாராணி திட்டமிட்டு கொடுத்தது போல் கச்சிதமாக பிளானை எக்சிகூட் செய்துள்ளனர் கொள்ளையர்கள்.

மதுரை, கோவையில் பதுங்கல்
கொள்ளையடித்த நகைகளுடன் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மர்மநபர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications