For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலையில் டிபன்.. மத்தியம் புளியோதரை, பிரியாணி.. கூடவே ஒரு குவார்ட்டர்.. இது அதிமுக பிரசார மெனு!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு கூட்டி வரப்படும் நபர்களுக்கான சிறப்பு கவனிப்புகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

கையில் காசு கொடுப்பதோடு சாப்பாடும், குடிக்க குவார்ட்டர் பாட்டிலும் தருகிறார்களாம் ஜெயலலிதா கூட்டங்களுக்கு வருவோருக்கு.

முன்பெல்லாம் கொள்கைக்காகவே மக்களே திரண்டு வந்து தலைவர்கள் பேச்சைக் கேட்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, தலைவர்களின் வீட்டு வாட்ச்மேன் கூட பேச்சை ரசித்துக் கேட்க முன்வருவதில்லை. அப்படியாகி விட்டது நிலைமை. எனவேதான் இப்போது சாப்பாடு, போக வர செலவு, கையில் காசு, கூடவே மது, பிரியாணி என சகல விதமாக கவனித்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு செல்கிறார்கள்.

இது தேனியில் நடந்த கதை

இது தேனியில் நடந்த கதை

இது தேனியில் நடந்த ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தின்போது கண்ட காட்சிகளின் ஒரு ஸ்மார்ட் தொகுப்பு.

பார்த்திபனுக்காக

பார்த்திபனுக்காக

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்களைத் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஆயிரக்கணக்கில் வாகனங்கள்

ஆயிரக்கணக்கில் வாகனங்கள்

இப்படி ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவதற்காக பல ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள், டிராக்டர்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஊரோரம் புளிய மரம்..

ஊரோரம் புளிய மரம்..

இந்த வாகனங்களை எல்லாம் மாவட்ட எல்லையில் உள்ள ஒவ்வொரு ஊரின் நுழைவாயிலிலும் நிறுத்தி வைத்திருந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்தியானம் ஏகப்பட்ட சாப்பாடப்போய்...

மத்தியானம் ஏகப்பட்ட சாப்பாடப்போய்...

மத்தியானம்தான் நிறைய வகையான சாப்பாடு போட்டுள்ளனர். அதாவது புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சம் பழ சாதம் மற்றும் பிரியாணி இதில் அடக்கம்.

குடிக்க அம்மா குடிநீர் மற்றும் ஒரு குவார்ட்டர்

குடிக்க அம்மா குடிநீர் மற்றும் ஒரு குவார்ட்டர்

இதுபோக குடிப்பதற்கு அம்மா குடிநீர் உள்ளிட்டதண்ணீர் கொடுத்துள்ளனர். பிறகு ஸ்பெஷல் ஐட்டமாக குவார்ட்டர் பாட்டிலும் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

சரக்கை வாங்கிய கையோடு

சரக்கை வாங்கிய கையோடு

பலர் சரக்கை வாங்கிய கையோடு வாகனங்களுக்குள் உட்கார்ந்தபடியும், கண்மாய்க் கரையில் அமர்ந்தும், மரத்தோடு ஒதுங்கிவிட்டதையும் காண முடிந்ததாக தேனிப்பக்கமிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

English summary
The crowd, which are being brought to attend Jayalalitha's meetings are offered variety of foods and liquor, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X