பள்ளிவாசலில் பெண் குழந்தையை கடத்திய இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. தென்காசி போலீஸ் அதிரடி
பள்ளிவாசலில் குழந்தையை கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
தென்காசி: 3 வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற, குற்றவாளியை தென்காசி போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது - நாகூர் மீராள் தம்பதிகள். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.
கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தன்னுடைய குடும்பத்துடன், திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார்.

குழந்தை
அன்றைய தினம் இரவு தம்பதிகள் அங்கேயே தங்கினார்கள்.. தம்பதிக்கு நடுவில் குழந்தை தூங்கி கொண்டிருந்தாள்.. 12-ந்தேதி அதிகாலை, ஒரு மர்ம நபர் அங்கு வந்து, குழந்தையை கடத்தி கொண்டு போய்விட்டார்... தூங்கி எழுந்து பார்த்தபோது, குழந்தை காணாததால், தம்பதிகள் பதறினர்.. அந்த பகுதி முழுக்க தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், இதுகுறித்து கூடங்குளம் போலீசாரிடம் புகார் செய்தனர்.

திருச்செந்தூர்
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், மர்ம நபர் குழந்தையை தூக்கிக்கொண்டு சாலையோரமாக செல்வது பதிவாகியிருந்ததை கண்டனர்... அதனால், அன்றைய நாள் முழுக்க இளைஞரை தேடும் பணி தீவிரமானது.. ஆனால், அந்த இளைஞரோ, குழந்தையை திருச்செந்தூரிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.. இறுதியில் குழந்தையை மீட்ட போலீசார், அதை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்..

தனிப்படைகள்
எனினும் குழந்தை பாத்திமாவை கடத்தியது யார் என்ற விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தேடுதல் வேட்டை ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த இளைஞர் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு ஒரு தனிப்படை விரைந்தது... சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கேரளாவிலேயே முகாமிட்டது..

பள்ளிவாசல்
ஒருவழியாக, தனிப்படையினர் நேற்றிரவு குழந்தையை கடத்தி சென்ற அந்த நபரை கண்டுபிடித்தனர்.. உடனே அவரை பிடித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையும் ஆரம்பமானது.. அந்த நபர் பாலக்காட்டை சேர்ந்தவர், முகமது பருக் என்பது பெய.. 34 வயதாகிறது.. சம்பவத்தன்று ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழுத்தில் கிடந்த நகையை பார்த்துள்ளார்.. அந்த நகையை திருடவே அன்றைய தினம் இரவு அங்கேயே தங்க திட்டமிட்டார்..

கவரிங்
இரவு நேரம் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தபோது, குழந்தையை தூக்கி கொண்டு சென்றுள்ளார்.. திருச்செந்தூருக்கு கடத்தி வந்த பிறகு, கழுத்தில் கிடந்த செயினை கழட்டினார்.. அப்போதுதான் அது கவரிங் என்றே தெரிந்தது.. அதனால், ஏமாந்துபோன முகமது பருக் குழந்தையை, அங்கேயே விட்டுவிட்டு தப்பியுள்ளார்.. இது அத்தனையும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார், முகமது பருக்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications