Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியின் “மாஸ்டர் ஸ்ட்ரோக்”.. 2 தேர்தல்கள்! வெற்றிகரமான தோல்வி.. அதிமுகவை கைப்பற்றியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில், 2 தேர்தல்களை வைத்து அதிமுகவின் அதிகார போட்டியில் வெற்றிக்கோட்டுக்கு அருகே நெருங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த 2 தேர்தல்கள் எவை? அதன் மூலம் எடப்பாடி சாதித்தது என்ன? விரிவாக பார்ப்போம்.

முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது. தர்ம யுத்தத்திற்கு பிறகு டெல்லியின் தலையீட்டால் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் இணைந்து ஒன்றாக கட்சியையும் ஆட்சியையும் கவனித்து வந்த இருவருக்கும் இடையே 2021 சட்டசபைத் தேர்தலின்போதே மோதல் வெடித்தது.

How Edappadi Palanisamy use 2 elections to capture ADMK leadership?

அதன் பிறகு மீண்டும் இருவரும் ஒற்றுமையான நிலையில் கடந்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போது இரட்டைக்குழல் துப்பாக்கி லேசாக பழுதானது. கடந்த ஆண்டு மே மாதம் பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது துப்பாக்கியின் 2 குழல்கள் தனியாக பிரிந்து ஒன்றை ஒன்று சுட தொடங்கின.

இப்படி வெடித்த மோதலால் ஏற்பட்ட தீ இன்று காட்டுத்தீபோல் பற்றி பரவிக்கொண்டு நிற்கிறது. மோதலை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதிஅதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. உடனே அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இப்படி சட்டப்போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோதுதான் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்திய வேட்பாளர் தென்னரசுவுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அவர் தரப்பை சேர்ந்த தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத் தலைவராகவும் ஏற்றது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்பதை எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் காட்டினார்.

அந்த சமயத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதுவே சரியாக நேரம் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச்செயலாளர் தேர்தலை மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியது. அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக அவர் பதவியேற்ற நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். 10 நாட்களில் இந்த வழக்கு தொடர்பாக முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கியது.

How Edappadi Palanisamy use 2 elections to capture ADMK leadership?

இதற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. எப்படி கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பெற்றாரே, அதேபோல் இம்முறை கர்நாடக சட்டசபைத் தேர்தலை பயன்படுத்தினார். மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதால் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.

இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. அத்துடன் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு உள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிறுத்தும் வேட்பாளர் தோல்வியடைந்தாலும் கூட, அதை வைத்து தலைமைக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றுவிட்டார் என்பதே உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+