அட்டகத்தியில் அம்பேத்கர் படம் வைத்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்றார்கள்...
கேள்வி: அட்டகத்தியில் உங்களுக்கு பிரச்சனைகள் வந்ததா?
பதில்: அம்பேத்கர் படத்தை மாட்டக்கூடாதென பிரச்சனை வந்தது. எங்கள் வீடுகளில் ஒருபக்கம் கலைஞர் போட்டோ இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் போட்டோவும் இருக்கும். கூடவே அம்பேத்கர் போட்டோவும். என் அப்பா திமுகவில் இருந்தார்.
ஆனால் எம்ஜிஆர் ரசிகர். இப்படித்தான் இருக்கும். ஆகவே அட்டகத்தியில் மூன்று பேரின் போட்டோவையும் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்தேன். ஆனால் அம்பேத்கரின் படம் இருந்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்று சொல்லி எடுக்கச் சொன்னார்கள்.

அம்பேத்கரோடு நான் அடிக்கடிப் பேசுவதுண்டு. அன்றும் பேசினேன். 'உங்கள் புகைப்படத்தை எடுக்கிறேன் என்று கோவிச்சுக் காதீங்க. உங்க மக்கள் பத்தின படத்தைத்தான் நான் எடுக்கிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு போட்டோவை எடுத்தேன்.
அப்புறம் மாட்டிறைச்சி குறித்து வசனத்தைப் படமாக்கும்போது உள்ளூற இக்காட்சியை படமாக்க வேண்டாம் என்று சொல்வார்களோ என்று பயமாக இருந்தது. அதைப் படமாக்கியவுடன் அத்தனை திருப்தியாக இருந்தது. படத்தில் நிறைய பேசியிருந்தோம்.
நிறைய எடிட் செய்து தூக்கிவிட்டார்கள். இக்காட்சியும் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக இக்காட்சி மட்டும் தப்பித்தது. முதன்முறையாக தலித்துகள் தங்களைப் பொருத்திப்பார்த்துக்கொண்ட படமாக அது இருந்தது. அப்போதே தொடங்கிவிட்டனர் சிலர்.
'தலித் வாழ்க்கையை ரஞ்சித் கொச்சைப்படுத்திவிட்டார்' என்று. ஆக ஆரம்பத்திலேயே ஒரு முத்திரை விழுந்துவிட்டது. அடுத்தப் படம் கிடைக்கவேண்டுமே என்கிற கவலை இருந்தது. பெரும்பான்மையினர் சாதியோடு இருப்பதால் ஒரு பயம் இருந்தது.
ஆனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர், சி.வி.குமார் போன்றோருக்கு நான் யார், என்ன சாதி, என்ன செய்கிறேன் என்று அறிந்தேதான் எனக்கு படம் தந்தனர். அதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications