For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமா துறையில் விருதுகளுக்கெல்லாம் புறக்கணிக்கப்பட்ட "அட்டகத்தி"

By Mathi
Google Oneindia Tamil News

ஜனவரியில் முடிந்த அட்டகத்தி ஆகஸ்டில்தான் வெளியானது. ஏழு மாதங்கள் முடங்கி இருந்தது. அட்டகத்தி பெரியளவில் பேசப்பட்டது. சில இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தார்கள். ஆனால் அட்டகத்தி சினிமாத்துறையில் விருதுகளுக்கெல்லாம் புறக்கணிக்கப்பட்டது.

மற்ற சில படங்களுக்கு விரும்பிக் கொடுக்கும்போது இதற்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு என்கிற கேள்வி எழுந்தது. அதே சமயம் ஒரு ஹாரர் படத்திற்கு விருது கொடுத்தனர். இது ஒரு முக்கியமான படைப்பு என்று ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை என்று எனக்குக் கவலையாக இருந்தது.

How Rajini speaks Dalit Politics in Kabali?

சில கோபங்கள் இருந்தன. பின் அவற்றைக் கடந்துவிட்டேன். அட்டகத்தி வெளியாவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் 'சார்பட்டா பரம்பரை' ஸ்கிரிப்ட் எழுதினேன். 'சார்பட்டா பரம்பரை' ஒரு பாக்ஸிங் ஸ்கிரிப்ட் . அப்புறம் 'மஞ்சள்' என்று ஒன்று. காமெடிப் படமாக உருவாக்கச் சொன்னபோதும் அதன் கரு சமூக அக்கறையாக இருந்தது.

அதைத்தாண்டி நான் கதையை யோசிக்கவில்லை. அப்புறம் வேறு கதை செய்து அதற்கு ரஜினி என்று தலைப்பு வைத்து, பின் கபாலி என்று மாற்றி, பின் காளி என்றாகி பின் அது மெட்ராஸ் ஆனது. தயாரிப்பாளருக்கு மெட்ராஸின் அரசியல் தெரியும்.

'கொஞ்சம் ஓவரா இல்லாமப் பார்த்துக்கோங்க' என்று மட்டும் சொன்னார்கள். மக்களின் பிரச்சனையைப் பேச வேண்டும் என்று நினைத்து செய்ததுதான் மெட்ராஸ். வறுமையைத்தாண்டிய மகிழ்ச்சி, கொண்டாட்டத்தோடு அதன் வலியையும் காண்பிக்க எண்ணித்தான் மெட்ராஸ் செய்தேன். அது அவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியது சந்தோஷமாக இருந்தது.

கேள்விகளைத் தூண்டி எதிர்த்தரப்பையும் யோசிக்கவைக்கவேண்டும் என்று தோன்றியது. அது நடந்தது. ஆனால் மெட்ராஸ் பல எதிரிகளை உருவாக்கித் தந்தது. அட்டகத்தியில் கூட 'அது ஒரு பிஅண்ட் சி படம். அதையா நல்ல படம்னு சொல்றீங்க?' என்கிற பிரச்சாரமெல்லாம் நடந்தது.

ஆனால் இப்பிரசாரம் பரவலாக கவனம் பெறவில்லை. மெட்ராஸில் ஒரு படி மேலே போய் திட்ட ஆரம்பித்தனர். பாராட்டும் திட்டும் சமமாக வந்தது. இரண்டையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில விரோதிகளும் உருவானார்கள். அவர்கள் என்னை கொலை செய்துவிடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். எல்லாம் நம் நண்பர்கள்தான்.

நம்மதான் கீரைமுள்ளு பரம்பரையாச்சே? அதை டீல் பண்ணிட்டேன். மெட்ராஸ் பார்த்துத்தான் ரஜினிசார் அழைத்தார். இப்போது கபாலிக்கும் பெரும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

English summary
Kabali Director Pa Ranjith explain How Rajinikanth accept to speak Dalit Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X