ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. ஐஆர்சிடிசியின் சூப்பர் திட்டம்!
சென்னை: ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் வசதி உள்ளது. இது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள்.
கோடைகாலம் என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து உள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணம் செய்வது அதிகரித்து உள்ளது.
பலரும் இதனால் ரயில்களில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது.

அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.
உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன.
புதிய வசதி:இப்படிப்பட்ட நிலையில்தான் ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் வசதி உள்ளது. இது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள்.
அதன்படி நீங்கள் ஒரு டிக்கெட்டை முன் பதிவு செய்கிறீர்கள். அந்த டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அதை நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் கொடுக்க முடியும். அதாவது உங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அந்த டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மிக சில விஷயங்கள் மட்டும்,
உண்மையில் அந்த டிக்கெட் பதிவு செய்யப்பட்டவருடன் நீங்கள் ரயில்வே முன்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கே முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் நீங்கள் செல்லலாம்.
அந்த டிக்கெட்டை காட்டி, அதை உங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
டிக்கெட்டை எடுத்தவரின் அடையாள அட்டையுடன் உங்கள் அடையாள அட்டையை காட்டி அதை உங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் இதை நீங்கள் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.
இதற்காக ரயில் புறப்படும் குறிப்பிட்ட நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக, பயணிகள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை அருகில் உள்ள ரயில் முன்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இ-டிக்கெட்டை தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன்/மனைவி போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றலாம்.
முன் பதிவு செய்த நபர், ஒரு பணியில் இருக்கும் அரசு ஊழியராக இருந்தால், ரயில் புறப்படும் குறிப்பிட்ட நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வசதி 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் வரை உங்கள் டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணம் செய்ய முடியாது. 2018ல் இந்த விதி மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வசதி பலருக்கும் தெரியாது. இதனால் பலர் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் இந்த வசதியை இனி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications