விடுதலைக்கு பின்னரும் தமிழர்களுக்கு கை விலங்கு: மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும், தமிழர்களை கை விலங்கிட்டு ஆந்திரா காவல்துறையினர் அழைத்துச் சென்ற சம்பவத்துக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளர்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு செம்மரக் கடத்தலை தடுக்க முயன்ற ஸ்ரீதர், கருணாகரன் ஆகிய இரண்டு வன அதிகாரிகளை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த 287 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

 Human rights activists condemned

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தமிழர்களை கைவிலங்கிட்டு ஆந்திரா போலீசார் அழைத்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இருந்த போதும், ஆந்திர காவலர்கள் இவ்வாறு தமிழர்களை கை விலங்கிட்டு அழைத்து சென்றது கண்டனத்துகுரியது என தேசிய மனித உரிமை கழக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபே ஆந்திர போலீசாரின் செயல் கண்டனத்துகுரியதும் என்றும் இந்த செயல் விதிகளுக்கு புறம்பான எனவும் தெரிவித்துள்ளார்..

இது, மனித உரிமையை மீறிய செயல் என மனித உரிமை ஆர்வலர்களும், தமிழக வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் கைதிகளின் பாதுகாப்பு கருதியே கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக ஆந்திரா போலீஸ் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+