மவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்த்த பொதுமக்கள் விசில் அடித்து ஆராவாரம் ! #Moulivakkam
சென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்த்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று திட்டமிட்டபடி ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. வெடி மருந்துகளை பயன்படுத்தி கட்டிடத்தின் இடிபாடுகள், கட்டிட இருக்கும் பகுதிகுள்ளே விழும் வகையில் கட்டிடம் இடிக்கப்பட்டது. இம்பிளோசன் என்ற அதிநவீன முறையில் கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்து ஏரியாக்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கூடினர். .

கட்டிடம் தகர்க்கப்படும் பகுதியின் அருகே பொதுமக்கள், கால் நடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, தூரத்திலுள்ள பில்டிங்குகளின் மொட்டை மாடிகளில் ஏறி நின்றபடி கட்டிடம் நொடிப்பொழுதில் இடிந்து விழந்ததை வியப்போடு பார்த்தனர். இதனால் அப்பகுதியிலுள்ள மொட்டை மாடிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதனால் மவுலிவாக்கம் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications