மாஜி எம்.எல்.ஏவின் துப்பாக்கி மாயம்... வலை வீசி தேடும் நூற்றுக்கணக்கான போலீஸ்
சங்கரன்கோவில்: கடையநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் கைத் துப்பாக்கி காணாமல் போய் விட்டதாம். அதைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிரமாக தேடி வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் யூனியன் ஆராய்ச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். இவர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் கடையநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
சுப்பையா பாண்டியன் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் நாட்டு தயாரிப்பான கைத் துப்பாக்கி ஒன்றை ரூ.1.80 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இதற்கு உரிய உரிமமும் வைத்துள்ளார்.
சுப்பையா பாண்டியன், தினசரி காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அப்போது பாதுகாப்பு கருதி கைத் துப்பாக்கியையும் எடுத்து செலவார்.
ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில் மலை மீது ராமர் கோவில் உள்ளது. அங்கு சுப்பையா பாண்டியன் தனது காரை நிறுத்தி விட்டு நடை பயிறசி செய்வார். வழக்கம் போல் காலை ராமர் கோவில் அடிவாரத்தில் இருந்த மின் மீட்டர் அறை முன் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பக்கத்தில் வைத்திருந்தார்.
தொடர்ந்து போன் பேசியபடியே பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து காரை எடுத்து கொண்டு மடத்து பட்டியில் உள்ள நண்பரது இல்லத்தில் நடந்த இறப்பு குறித்து தூக்கம் விசாரிக்க சென்றவர், அங்கு சென்றதும்தான் இடுப்பில் துப்பாக்கி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ராமர் கோவில் பகுதிக்கு விரைந்து சென்ற அவர் துப்பாக்கியைத் தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் லோடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
இதையடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி மாதவன் தலைமையில் சங்கரன்கோவில் சரகத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் ஆதிலிங்கம் போஸ், பிரபாகரன், மனோகரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆராய்ச்சிபட்டி மலைப்பகுதியில் துப்பாக்கியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லையில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட மொபைல் போலீசாரும் துப்பாக்கியை தேடி வருகின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமத்தில் தண்டோரா போட்டும் துப்பாக்கியை பதட்டத்துடன் தேடி வருகின்றனர்.
6 தோட்டா லோட் செய்யப்பட்டுள்ளதால் விபரீதம் நிகழ்வதற்குள் கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications