”டாக்டரானாலும் வரதட்சணை கொடுக்கனும்” – வரதட்சணைப் புகாரில் கணவன் கைது
கோவை: கோவையில் மனைவியிடம் வரதட்சணைக்கேட்டு கொடுமை செய்த மருத்துவரான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை புலியகுளம் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் லூர்து ஆரோக்கியகுமார். இவரது மகள் அபிநயா . ஹோமியோபதி மருத்துவரான இவர் கோவை இராமநாதபுரம் போலீஸில் சனிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது,
"எனக்கும் கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெலிக்ஸ் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூபாய் 2 லட்சம் மற்றும் 70 பவுன் நகைகள் என்னுடைய பெற்றோர்கள் மூலம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது.
தற்சமயம் எனது கணாவர் ஜார்ஜ் பெலிக்ஸ் சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ஹோமி யோபதி கிளினிக் வைத்துள்ளார். இந்த கிளினிக்கை விரிவாக்கம் செய்வதற்காக எனது தந்தை வீட்டிலிருந்து ரூபாய் 10 லட்சம் வாங்கி வருமாறு ஜார்ஜ் பெலிக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாள்களாக என்னை துன்புறுத்தி வருகின்றனர்" என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் பெலிக்ஸ், அவரது தந்தை ஜெயக்குமார், தாயார் லில்லி மற்றும் உறவினர்கள் உள்பட 9 பேர் மீது வரதட்சிணைக் கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இவ்வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸார் வசம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications