கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- போலீஸ் விசாரணை
கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கரூர்: கரூர் அருகே கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கணேசன். இவருக்கு வயது 50. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களது மகன் சுந்தரம் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து சுந்தரம் உள்ளே சென்றார்.
உள்ளே சென்று பார்த்த போது தம்பதியினர் இருவரும் கேபிள் வயர் மற்றும் மின்சார ஒயரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதனையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட தம்பதியினருக்கு சுந்தரம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications