ஹைட்ரோ கார்பன் திட்டம்... மத்திய அரசை எதிர்ப்போம்... அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தாலும் விட மாட்டோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தங்கள் வாழ்வாதாரம், நிலத்தடி நீர், விவசாயம் ஆகியன பாதிக்கப்படும் என்பதால் மேற்கண்ட திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Hydrocarbon project can not be processed, says Minister Vijayabaskar

இதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்போராட்டத்தை வாபஸ் பெற வைத்தது. இதையடுத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நெடுவாசல் மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும்,

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். அதை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தாலும் எதிர்ப்போம் என்றார்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Vijayabaskar says that the TN government should not allow the centre to carry out the hydro carbon project.
Please Wait while comments are loading...