Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று "நோ" சொன்ன அதே ஹூண்டாய்! இன்று தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முதலீடு! வந்தது சர்ப்ரைஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமான முதலீடு ஒன்றை மேற்கொள்ள போவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது. ஆனா அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

Hyundai plans to set up a battery plant in Tamil Nadu by 2025 to drive down cost of electric vehicles

கியா முதலீடு போனது; இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டாய் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான். கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது.

மீண்டும் அறிவிப்பு; இந்த நிலையில் தமிழ்நாட்டில் முக்கியமான முதலீடு ஒன்றை மேற்கொள்ள போவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்குள் முதல் கட்டமாக ஆண்டுதோறும் 75,000 பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பேட்டரி அசெம்பிளி ஆலையில் ஹூண்டாய் ₹700 கோடி முதலீடு செய்கிறது.

இந்திய சந்தையில் EV தொழிற்சாலைகள் 2% க்கும் குறைவாக உள்ளது. இந்த பேட்டரி தயாரிப்பு அந்த நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது.

மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+