பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் நான் அல்ல.. அமைச்சர் செங்கோட்டையன் பளீச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் நான் அல்ல என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் அரசுப் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

I am not a Chameleon to change color frequently: Minister Sengottaiyan

அப்போது பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் தான் அல்ல என்று அவர் கூறினார். தனது முடிவு எப்போதும் தெளிவாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தனது அரசியல் வயதுக்கூட இல்லாதவர்கள் தன்னை விமர்சிக்கிறார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் வேதனை தெரிவித்தார். தன்னைப் பற்றி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது என்றும் செங்கோட்டையன் எச்சரித்தார்.

நான் செல்கின்ற பாதை சரியாக இருக்கிறதா என்பதை சிந்தித்து செயல்படக்கூடியவன் நான் என்றும் அவர் கூறினார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சோதனை வந்த போதும் தெளிவாக இருந்தேன் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan said I am not a Chameleon to change color frequently. Sengottaiyan said my decision will be clear.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற