"நான் துணை பொதுச் செயலாளர்"... அடிக்கடி யாருக்கு நினைவுப்படுத்துகிறார் தினகரன்?
தினகரன் அளிக்கும் பேட்டிகளில் நான் துணை பொதுச் செயலாளர் என்று அடிக்கடி அவர் கூறி வருவது யாருக்கு நினைவுப்படுத்துகிறார் என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சென்னை: தினகரன் அளிக்கும் பேட்டிகளில் நான் துணை பொதுச் செயலாளர் என்று அடிக்கடி கூறிவருவது யாருக்கு நினைவுப்படுத்துவதற்காக என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலா ஆட்சியையும் , கட்சியையும் கைப்பற்ற நினைத்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆகினார் சசிகலா.
ஆட்சியை கைப்பற்ற முனைப்புக் காட்டியபோது சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். சசிகலா சிறை சென்ற போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்து விட்டு சென்றார். எனினும் சசிகலாவை ஓரங்கட்ட நினைத்த தினகரன், ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட்டு வந்தார். இது அமைச்சர்களை ஒரு கட்டத்தில் எரிச்சலுக்கு ஆளாக்கியது.

சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பு
இதனால் தினகரனை ஓரங்கட்ட அமைச்சர்கள் முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

சசிகலாவை ஒதுக்கிவைத்தனர்
சசிகலாவையும் , அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்தால் மட்டுமே அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று ஓபிஎஸ் தரப்பு கறாராக தெரிவித்துவிட்டது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

பொதுக் குழு கூட்டம்
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுகவின் பொதுக் கூடியது. இதில் சசிகலா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டும், சசிகலா, தினகரனின் நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதேபோல் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களையும் கட்சி தாவல் சட்டத்தில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

பொதுச் செயலாளர்
அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் நடந்த நாளிலிருந்து ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் டிடிவி தினகரன் "நான் துணை பொதுச் செயலாளர்" என்று அவ்வப்போது கூறி கொள்கிறார். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே நீக்கப்பட்ட நிலையில் இவர் அவ்வப்போது தான் பொதுச் செயலாளர் என்று கூறி வருகிறார்.

எடப்பாடிக்கு சூசகமா?
தினகரனையும், சசிகலாவையும் நீக்கப்பட்ட பின்னரும் தினகரன் துணை பொதுச் செயலாளர் என கூறி வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நினைவுப்படுத்துவதற்காகவும், எடப்பாடி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக் குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று எடப்பாடி அணிக்கு சூசகமாக தெரிவிப்பதாகவுமே என கூறப்படுகிறது. மேலும் தினகரன் அவ்வாறு கூறி கொள்ளாவிட்டால் பொதுக் குழு தீர்மானங்களுக்கு அவர் கட்டுப்படுவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவர் அவ்வப்போது தனது பதவியை கூறி வருகிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications