For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோரிக்கையை ஏற்ற மக்கள்.. தமிழகத்தில் நடந்த கிராம சபை கூட்டங்கள்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவு தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

அதில் அவர் ஆகஸ்ட் 15ல் நடக்கவிருக்கும், நடக்க வேண்டிய கிராம சபை கூட்டங்கள், உங்கள் வலுவை நிரூபிக்கும். உங்கள் வலுவை உங்களுக்கே தெரிவிக்கும். விஷம் கக்கும் ஆலை முதல், எட்டுவழிச் சாலை முதல் எது வேண்டும், எது வேண்டாம் என்று முடிவெடுக்கும் பலம், உங்கள் கையில் என்பதை கிராம சபைகள் உங்களுக்கு நிரூபிக்கும். தயவுசெய்து உங்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துங்கள். அது உங்கள் கரங்களை வலுப்பெறச் செய்யும். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

I am thrilled at the public participation for Gram Sabha in Tamilnadu: Kamal Haasan

இதையொட்டி பல ஊர்களிலும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. எந்த ஒரு அரசு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்த எதிர்ப்புக்கு பலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். அவர் கூறுகையில், தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்றது வியப்பளித்தது. புரிதலுடன் சுதந்திர தினம் கொண்டாடிவருகிறோம். நீங்கள்தான் உள்நாட்டு ராணுவம், நமது தேசத்தின் எதிரிகளையும், ஊழலையும் எதிர்த்து போரிடுபவர்கள். கவனம் வையுங்கள்! இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
"I am thrilled at the public participation for Gram Sabha in Tamilnadu. We are celebrating our Independence with understanding. March on Gram Sabhas. You are the internal army that fights corruption and the enemies of our Nation. You are an army! Pay attention!" Says Kamal Haasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X