பொறுப்பற்ற முறையில் யாரோ பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. டிடிவி தினகரன் தடாலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: பொறுப்பற்ற முறையில் யாரோ பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நன்மைக்காக எதையும் செய்ய தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேருடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

I can not answer for the talk of irresponsibility persons: TTV Dinakaran

அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம் என்று கூறிய அவர் அதிமுக பல நூற்றாண்டுகள் தலைச்சிறந்த இயக்கமாக இருக்க பாடுபடவேன் என்றார். பொறுமையாக இருந்து அதிமுகவை வழிநடத்தி செல்வோம் என்றும் தினகரன் கூறினார்.

அதிமுக வளர்ச்சிக்காக அறுவை சிகிச்சை செய்யவும் தயங்கமாட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாத என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது சரிதான் என்றும் அவர் கூறினார்.

TTV Dinakaran Gave Amount to Get the Double leaf Symbol? தினகரன்-சுகேஷ் சந்திரா யாருன்னே தெரியாது!

தனக்கு எதிரான எடப்பாடி அணியின் தீர்மானம் செல்லாது என்றும் அந்த தீர்மானம் போர்ஜரியானது என்றும் தினகரன் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் ஒன்றும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் கூறி வருகிறார் என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran meets press in Thanjavur after the discussion with his support MLAs. He said i will go any extreme to health of party. I can not answer for the talk of irresponsibility persons he said.
Please Wait while comments are loading...