சாப்பிடும் போது இழுத்து சென்றார்கள்.. எங்கே என்று தெரியவில்லை.. கவுதமன் மனைவி கண்ணீர் பேட்டி
சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். அவரை எங்கு அழைத்து சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.
காவிரிப் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு நிலவியது. இதில் போராடியவர்களை தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதில் போராடியதற்காக தற்போது இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது குறித்து கவுதமன் மனைவி மல்லிகா பேட்டியளித்துள்ளார். வீட்டில் சாப்ப்பிட்டிகொண்டு இருந்தவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அதில், அப்போதுதான் வீட்டிற்கு வந்து அவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். சரியாக 2.30 மணி இருக்கும். அப்போது வீட்டிற்குள் வேகமாக போலீஸ் வந்தார்கள். சரியாக்க 12 பேர் வந்தனர். டிஎஸ்பி கூப்பிட்டதாக கூறினார்கள்.
என் கணவர் சம்மன் இருக்கிறதா என்று கேட்டதற்கு, சம்மன் இல்லை, டிஎஸ்பிதான் கூப்பிட்டாங்க, என்று கூறிவிட்டு சுற்றி நின்றார்கள். சும்மா விசாரணைதான் வாருங்கள் என்று கூறினார்கள். என் கணவர் சாப்பிட்டுவிட்டு வரலாமா என்று கேட்டார்.
அதற்கு சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் சாப்பிட சொல்லிவிட்டு அவரை சாப்பிட விடாமல் போலீஸ் சுற்றி வளைத்துக் கொண்டது. ஒரு தீவிரவாதியைப் போலீஸ் என கணவரை நடத்தியது. பின் சாப்பிடவிடாமல் அவரை இழுத்து சென்றனர்.
அவரை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று சொல்லவில்லை. எதற்காக என்றும் சொல்லவில்லை. இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கேட்ட போது கூட சொல்லவில்லை. விசாரணை என்று மட்டும் சொன்னார்கள், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்கள், என்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications